தேவ்னாரில் 223 ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் அகற்றம்


தேவ்னாரில் 223 ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் அகற்றம்
x
தினத்தந்தி 18 May 2017 4:05 AM IST (Updated: 18 May 2017 4:05 AM IST)
t-max-icont-min-icon

தேவ்னாரில் 223 ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளை மாநகராட்சி இடித்து தள்ளியது.

மும்பை

தேவ்னாரில் 223 ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளை மாநகராட்சி இடித்து தள்ளியது.

ஆக்கிரமிப்பு குடிசைகள்


மும்பை ‘எம்’ கிழக்கு வார்டில் உள்ள தேவ்னார் பகுதியில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து அதிகளவில் குடிசை வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், ரபிக்நகர் மற்றும் பாபா நகர் பகுதிகளில் ஏராளமான குடிசை வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாநகராட்சி துணை கமிஷனர் பாரத் மராட்டே உத்தரவின்பேரில் அந்த வீடுகளை இடித்து தள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அகற்றம்

வீடுகளை இடிக்க குடிசைவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து குடிசைவாசிகள் வெளியேற்றப்பட்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் வீடுகள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன.

மேற்படி இரண்டு இடங்களிலும் மொத்தம் 223 குடிசை வீடுகள் அகற்றப்பட்டன. 

Next Story