ஜந்தகல் கனிம சுரங்க நிறுவன முறைகேடு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு இடைக்கால முன்ஜாமீன்
ஜந்தகல் கனிம சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி பெங்களூரு செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு

ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகாவில் 2007-ம் ஆண்டு ஜந்தகல் கனிம சுரங்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுரங்க தொழில் ஒப்பந்தம் சட்டவிரோதமான முறையில் நீட்டிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு பற்றி லோக் அயுக்தாவின் சிறப்பு விசாரணை குழு வழக்குப்பதிவு செய்தது. இதில் தொடர்புடையதாக கூறப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கங்காராம் படேரியாவை கடந்த 15-ந் தேதி லோக் அயுக்தா சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்துள்ளனர். கைதான கங்காராம் படேரியா, கர்நாடக வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் குமாரசாமி கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தபோது தான் அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டதாகவும், அவருடைய அழுத்தம் காரணமாகவே அந்த நிறுவனத்திற்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து குமாரசாமி மீதும் லோக் அயுக்தா சிறப்பு விசாரணை குழு வழக்குப் பதிவு செய்துள்ளது. விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி குமாரசாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் குமாரசாமியும் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது.
குமாரசாமிக்கு முன்ஜாமீன்
இந்த நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி பெங்களூரு செசன்சு கோர்ட்டில் குமாரசாமி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, குமாரசாமிக்கு ஒரு வாரம் இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கோர்ட்டு அனுமதி இல்லாமல் நாட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு வருகிற 24-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குமாரசாமி, “ஜந்தகல் கனிம சுரங்க நிறுவன வழக்கில் நாளை(அதாவது இன்று) சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிப்பேன். எனக்கு பெங்களூரு கோர்ட்டு ஒரு வாரம் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது. என்னை ஒரு நாளாவது கைது செய்து சிறையில் அடைத்து, எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த கர்நாடக அரசு முயற்சி செய்கிறது“ என்றார்.

Related Tags :
Next Story