மாவட்ட செய்திகள்

போலீசை காப்பாற்றிய ‘செல்ல ஹீரோ’ + "||" + Pet hero saved by police

போலீசை காப்பாற்றிய ‘செல்ல ஹீரோ’

போலீசை காப்பாற்றிய ‘செல்ல ஹீரோ’
‘கேஸ்பர்’ என்ற நாய், அதிகாரியின் நெஞ்சைப் பிளக்க இருந்த குண்டை, தன்னுடைய காலில் வாங்கிக்கொண்டது.
பிலீப் ஓஷியா என்ற கடத்தல் மன்னனை பிடிக்க சென்றபோது, போலீசாருக்கும், கடத்தல் கும்பலுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்தச் சண்டையில் ஒரு போலீஸ் அதிகாரியின் காலில் குண்டடிபட்டது. உடனே பிலீப் ஓஷியா, அந்த அதிகாரியை கொன்றுவிட நெஞ்சை நோக்கி துப்பாக்கியை குறிவைத்தான்.

அந்த சமயத்தில் அதிகாரியுடன் சென்றிருந்த ‘கேஸ்பர்’ என்ற நாய், அதிகாரியின் நெஞ்சைப் பிளக்க இருந்த குண்டை, தன்னுடைய காலில் வாங்கிக்கொண்டது. உடனே சுதாரித்து கொண்ட அதிகாரி, கடத்தல் மன்னனை சுட்டுக்கொன்றதுடன், தன்னை காப்பாற்றிய நாயை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிவிட்டார். இருவருக்கும் அறுவை சிகிச்சை முடிந்து தேறி வருகிறார்கள்.