ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்பு


ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 19 May 2017 4:00 AM IST (Updated: 19 May 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நேற்று ஊர்வலம் நடத்தினர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 144 தொண்டர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். 2-ம் கட்டமாக இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த முகாமை ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவர் மோகன்பகவத் பார்வையிட்டு 4 நாட்கள் பயிற்சி அளித்தார். கடந்த 12-ந்தேதி தஞ்சை வந்த அவர் பயிற்சியை முடித்துக்கொண்டு கடந்த 15-ந்தேதி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இதன் நிறைவு நாள் நேற்று நடைபெற்றது.

ஊர்வலம்

இதையொட்டி பயிற்சி முகாமில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கீழராஜவீதி, வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி, சிவகங்கை பூங்கா, ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வழியாக பனகல் கட்டிடத்தை அடைந்தது. முன்னதாக ஊர்வலம் தொடங்கிய போது காவி கொடிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

இந்த ஊர்வலத்திற்கு ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். கேரளா, தமிழ்நாடு மாநில செயலாளர் ஸ்தானுமாலையன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை தர்ம ரக்‌ஷன சமிதி மாவட்ட தலைவர் சிவாஅமிர்தலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் மாநில செயலாளர் ஆடலரசன், மண்டல தலைவர் அய்யப்பன், மாவட்ட தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

பின்னர் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வாகனங்களில் பயிற்சி நடைபெற்ற இடத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற நிறைவு விழாவில் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.


Related Tags :
Next Story