மத்திய அரசை கண்டித்து தமிழ்ப்புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டதால் மத்திய அரசை கண்டித்தும், இந்த தடையை நீக்க வலியுறுத்தியும் தமிழ்ப்புலிகள் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டதால் மத்திய அரசை கண்டித்தும், இந்த தடையை நீக்க வலியுறுத்தியும் தேனி நேரு சிலை சிக்னல் அருகில் தமிழ்ப்புலிகள் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் தலித்ராயன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.
Related Tags :
Next Story