விழுப்புரத்தில் பரபரப்பு டாக்டர் ராமதாஸ், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவபொம்மை எரிப்பு


விழுப்புரத்தில் பரபரப்பு டாக்டர் ராமதாஸ், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவபொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 29 May 2017 3:45 AM IST (Updated: 28 May 2017 10:55 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் டாக்டர் ராமதாஸ், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவபொம்மையை எம்.ஜி.ஆர்.–ஜெயலலிதா–தீபா பேரவையினர் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை தமிழக சட்டசபையில் திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், அவரது உருவப்படத்தை திறக்க பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உருவபொம்மை எரிப்பு

இதனை கண்டித்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் முன்பு எம்.ஜி.ஆர்.–ஜெயலலிதா–தீபா பேரவையினர் 50–க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

அப்போது, டாக்டர் ராமதாஸ் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரது உருவபொம்மைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தி, கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, எம்.ஜி.ஆர்.–ஜெயலலிதா–தீபா பேரவையினரிடம் பேசி, கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story