பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா: பால்குடங்களுடன் பெண்கள் ஊர்வலம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று 251 பால்குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், பக்தி இன்னிசை, சமயஉரை, வாகன பவனி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று காலை 9 மணிக்கு மறக்குடி தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து 251 பால்குடங்களுடன் பெண் பக்தர்கள் ஊர்வலமாக பகவதி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர். ஊர்வலம் கோவிலை அடைந்ததும் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு எண்ணெய், பால், தேன், இளநீர், களபம், குங்குமம், நெய், தயிர் போன்ற அபிஷேகங்களும் நடந்தது.
அன்ன வாகனத்தில் வீதி உலா
அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் வைர கிரீடம் அணிந்து பகவதி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சிறப்பு அன்னதானமும், மாலை இன்னிசை நிகழ்ச்சியும், இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடந்தது. 9–ந் திருவிழாவான 6–ந் தேதி காலையில் தேரோட்டம், 7–ந் தேதி காலையில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டும், இரவு தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது.

Related Tags :
Next Story