வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி


வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி
x
தினத்தந்தி 1 Jun 2017 3:30 AM IST (Updated: 1 Jun 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் ஜமாபந்தி நடந்தது.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. அதன்படி வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 114 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

ஜமாபந்தியில் நிலஅளவை உதவி இயக்குனர் சுந்தர்ராஜன், வேடசந்தூர் தாசில்தார் தசாவதாரம், கலெக்டர் அலுவலக மேலாளர் செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை தாலுகா

இதேபோல் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இதில் பெறப்பட்ட 440 மனுக்களில், 117 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. ஒருத்தட்டு கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருக்கிற 20 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.

இதில் நிலக்கோட்டை தாசில்தார் நிர்மலா கிரேஸி, வட்ட வழங்கல் அலுவலர் முத்துராமன், மண்டல துணை தாசில்தார்கள் கார்த்திக்கேயன், சரவணவாசன், வட்ட துணை ஆய்வாளர் பன்னீர்செல்வன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம்

இதேபோல் ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) எம்.அத்தப்பம்பட்டி, நவக்கானி மண்டவாடி தொகுப்பு, அம்பிளிக்கை சிந்தலப்பட்டி தொகுப்பு, காப்பிளியப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு நடைபெறுகிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) புலியூர்நத்தம், இடையகோட்டை இ.கல்லுப்பட்டி தொகுப்பு, வலையபட்டி, ஜவ்வாதுபட்டி, ஜோகிபட்டி, வெரியப்பூர், புளியமரத்துக்கோட்டை, கேதையுறும்பு ஆகிய கிராமங்களுக்கும், வருகிற 6–ந்தேதியன்று கரியாம்பட்டி, அப்பனூத்து புங்கமுத்தூர் தொகுப்பு, அப்பிபாளையம் பாலப்பன்பட்டி தொகுப்பு, அப்பியம்பட்டி பூசாரிபட்டி தொகுப்பு, கூத்தம்பூண்டி, கள்ளிமந்தையம், பருத்தியூர் ஆகிய கிராமங்களுக்கும் நடைபெற உள்ளது.

தேவத்தூர், பொருளூர், கொத்தயம், போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, புதூர், சிக்கமநாயக்கன்பட்டி பொட்டிக்காம்பட்டி தொகுப்பு ஆகிய கிராமங்களுக்கு 7–ந் தேதியும், சிந்தலவாடம்பட்டி, பெரியகோட்டை–ரெட்டியபட்டி தொகுப்பு, ஒட்டன்சத்திரம் டவுன், சத்திரப்பட்டி, வீரலப்பட்டி, தாசரிபட்டி–புதுக்கோட்டை தொகுப்பு ஆகிய கிராமங்களுக்கு 8–ந்தேதியும் நடைபெறுகிறது.

விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி அரசப்பபிள்ளைபட்டி தொகுப்பு, அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி கொல்லப்பட்டி, லெக்கையன்கோட்டை தொகுப்பு, வடகாடு, தங்கச்சியம்மாபட்டி ஆகிய கிராமங்களுக்கு 9–ந்தேதியும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல் மற்றும் வருவாய்த்துறை சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை ஒட்டன்சத்திரம் தாசில்தார் மாரிமுத்து மற்றும் வருவாய்த்துறையினர் செய்து வருகின்றனர்.


Next Story