இறைச்சிக்கு மாடு விற்பனை செய்ய தடை: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சந்தைகளில் இறைச்சிக்காக மாடு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சென்னை,
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதாரணி, எஸ்.சி.பிரிவு தலைவர் செல்வபெருந்தகை, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
மாட்டு இறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பது மக்களுக்கு எதிரான செயல். பா.ஜ.க. தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் இதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இந்த உத்தரவினால் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் தரும் தொழில் நசுக்கப்படுகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story