கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம்
கே.புதுப்பட்டி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
அரிமளம்,
அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள கொங்கன் தெருவில் நொண்டி ஐயா கோவில் உள்ளது. இக்கோவிலில் நடந்த மதுஎடுப்பு திருவிழாவையொட்டி நேற்று மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாடுகள் கலந்து கொண்டன. பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான்மாடு, பூஞ்சிட்டுமாடு என நான்கு பிரிவாக போட்டி நடைபெற்றது.
பரிசுகள்
பெரிய மாடு பிரிவில் முதல் பரிசை தினையக்குடி ஆர்.கே. சிவா மாடும், நடு மாடு பிரிவில் முதல் பரிசை நெற்புகைபட்டி நந்தகுமார் மாடும், கரிச்சான் மாடு பிரிவில் முதல் பரிசை கொங்கன் தெரு காசி அம்பலம் மாடும், பூஞ்சிட்டு மாடு பிரிவில் முதல் பரிசை தினையக்குடி சிவா மாடும் பெற்றன. பின்னர் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தை திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கே.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள கொங்கன் தெரு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story