அரவக்குறிச்சி அருகே சாலையை மறித்து தடுப்பு கம்பி அமைப்பு


அரவக்குறிச்சி அருகே சாலையை மறித்து தடுப்பு கம்பி அமைப்பு
x
தினத்தந்தி 1 Jun 2017 4:15 AM IST (Updated: 1 Jun 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி அருகே சாலையை மறித்து அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி அருகே உள்ளது சூரப்பநாயக்கனூர். இந்த ஊர் வழியாக வேலன்செட்டியூர், பள்ளப்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிக்கு சாலை போடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஊரின் நடுவே உள்ள சாலையில் இரும்பு கம்பியை குறுக்கே கட்டி பூட்டுப்போட்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி இருப்பதால், சுங்க கட்டணம் செலுத்தாமல் சில வாகனங்கள் சூரப்ப நாயக்கனூர் வழியாக சென்றது.

இவ்வாறு செல்லும் வாகனங்களை தடுப்பதற்காகவே இரும்பு கம்பியால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிராமப்பகுதிகளுக்கு கார், வேன், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடிவதில்லை. இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:-

சூரப்பநாயக்கனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளுக்கு கார், வேன்களில் செல்லும்போது சூரப்ப நாயக்கனூரில் சாலையில் தடை ஏற்படுத்தி பூட்டு போட்டுள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லமுடியாமல் மிகவும் சிரமம் ஏற்படுகிறது.

அகற்ற வேண்டும்

இரவு நேரங்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போனால் அவசரதேவைக்கு கார் கூட வரமுடியாத நிலை உள்ளது. உடல்நலம் சரியில்லாதவர்களை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து பின்னர் காரில் ஏற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சூரப்பநாயக்கனூரில் சாலையில் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டுள்ள தடையை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story