படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை
படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் மின்கோபுரத்தில் தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை
திருப்பரங்குன்றம்,
படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் மின்கோபுரத்தில் தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.கல்விக்கடன்
திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் அரவிந்த் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் அரசு போக்குவரத்து கழக ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது27) என்ஜினீயரிங் படித்து முடித்து சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க வில்லை, கிடைத்த வேலைக்கும் ஏற்ற சம்பளம் கிடைக்கவில்லை என்று ரஞ்சித்குமார் விரக்தியில் இருந்து வந்தராம். இந்த நிலையில் தனது படிப்புக்காக வங்கியில் வாங்கிய கல்விக்கடனை செலுத்தவும் முடியவில்லை. எவ்வாறு கல்விக் கடனை செலுத்துவது என்ற சிந்தனையிலேயே கடந்த சில வாரங்களாக சோர்வாக காணப்பட்டாராம். பிறகு ஊருக்கு திரும்பிய அவர் நேற்று அதிகாலையில் திருநகர் லயன் சிட்டி பகுதியில் உள்ள மின் அழுத்த உயர் கோபுரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணைஇதுகுறித்து தகவல் அறிந்த திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்–இன்ஸ்பெக்டாகள் சாந்தா முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரைக்கு அனுப்பி வைததனர். ரஞ்சித்குமார் எழுதி சட்டை பையில் வைத்து இருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பருக்கு கிட்னியை தானமாக வழங்க கடிதம்
தூக்குப்போட்டு தற்கொலை செய்வதற்குமுன் ரஞ்சித்குமார் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் தனது நண்பன் மாதவனுக்கு தனது கிட்னியை தானமாக வழங்குங்கள், தனது உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள், தனது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. அதனால் கல்வி கடனை செலுத்த முடியவில்லை. இதனால் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்டு இருந்தார்.