விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை போலீசார் வலைவீச்சு
புதுப்பாளையம் கிராமத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்,
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்துள்ள புதுப்பாளையம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). விவசாயி. இவரது மனைவி அஞ்சுகம் (45), மகன் சிலம்பரசன் (27). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு காற்றோட்டத்திற்காக வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கினர்.
நேற்று காலை அஞ்சுகம் எழுந்து வீட்டின் உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
10 பவுன் நகை கொள்ளை
இதையடுத்து அஞ்சுகம் வீட்டின் உள்ளே உள்ள பூஜை அறையில் சென்று பார்த்தபோது அங்கிருந்த சூட்கேஸ் காணவில்லை. இதையடுத்து அவர் வெளியே வந்து ரஜேந்திரன், சிலம்பரசனை எழுப்பி இதுகுறித்து கூறினார். இதையடுத்து அவர்கள் வீட்டின் பின்னால் சென்று பார்த்த போது அங்கு சூட்கேஸ் உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், பாஸ்போர்ட், ஏ.டி.எம்.கார்டு உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Related Tags :
Next Story