அம்மாப்பேட்டை அருகே நாட்டு வெடிகள் வெடித்து 2 பேர் பலி
அம்மாப்பேட்டை அருகே நாட்டு வெடிகள் வெடித்து 2 பேர் பலியானார்கள்.
அம்மாப்பேட்டை,
தஞ்சாவூர் கீழ்வாரி சோழன் நகரை சேர்ந்தவர் கணபதி (வயது48). இவர் கோவில் திருவிழாக்கள், வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அம்மாப்பேட்டை அருகே ராராமுத்திரக்கோட்டை பகுதியில் உள்ள தெட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கொட்டகை அமைத்து நாட்டு வெடிகளை தயாரித்து வந்தார். இங்கு தஞ்சாவூர் மன்னையார் தோட்டம் பகுதியை சேர்ந்த நாகராஜன் (37), ராராமுத்திரக்கோட்டை கீழ அம்பலகார தெருவை சேர்ந்த பிச்சையன் (55), ராராமுத்திரக்கோட்டை தென்கொண்டார் இருப்பு குடியான தெருவை சேர்ந்த முத்தமிழ்நாதன் (55) ஆகிய 3 பேரும் நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதே கொட்டகையில் வெளி ஊர்களில் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
விபத்து
இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் நாகராஜன், பிச்சையன், முத்தமிழ்நாதன் ஆகிய 3 பேரும் நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகள் வெடித்து சிதறி விபத்து நடந்தது. இதில் நாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த பிச்சையன், முத்தமிழ்நாதன் ஆகிய 2 பேரும் 108 ஆம்புலன்சு மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பிச்சையன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். முத்தமிழ்நாதன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு படை வீரர்கள் நிலை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
விபத்து நடந்த தோட்டத்தில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து கொண்டனர்.
கைது
கணபதி அனுமதியின்றி நாட்டு வெடிகளை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story