போதைப்பொருளுடன் சிக்கியவருக்கு 10 ஆண்டு ஜெயில் தானே கோர்ட்டு தீர்ப்பு
போதைப்பொருளுடன் சிக்கியவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தானே,

போதைப்பொருள்
தானே மாவட்டம் காஷிமிராவில் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி போதைப்பொருள் விற்பனை செய்ய வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 18 கிலோ எடைகொண்ட ஹசிஸ் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்களது பெயர் அமித் பிரிஜ்மோகன் (வயது33), முகமது ஹமீது, முகமது இக்பால் அப்துல் என்பது தெரியவந்தது. இவர்களில் அமித் பிரிஜ்மோகன் டெல்லியில் உள்ள நந்த்நகரை சேர்ந்தவர் ஆவார்.
10 ஆண்டு ஜெயில்
போலீசார் அவர்கள் மீது தானே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த முகமது ஹமீது, முகமது இக்பால் அப்துல் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
அமித் பிரிஜ்மோகன் மீதான விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் அவர் மீதான போதைப்பொருள் விற்பனைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டு நிரூபணமானது. இதையடுத்து அவருக்கு நீதிபதி 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Tags :
Next Story