பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை


பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை
x
தினத்தந்தி 1 Jun 2017 4:16 AM IST (Updated: 1 Jun 2017 4:16 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள நெம்பர்.3 கொமாரபாளையத்தை சேர்ந்தவர் வரதராஜ் . இவரது மகன் சரத்குமார் (வயது23). அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து முடித்து உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 14 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி இரவு மாணவி கழிவறைக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த சரத்குமார் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.

10 ஆண்டு சிறைத்தண்டனை

இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது நாமக்கல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ குற்றம்சாட்டப்பட்ட சரத்குமாருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சரத்குமார் போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story