கடலூரில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


கடலூரில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Jun 2017 4:47 AM IST (Updated: 1 Jun 2017 4:47 AM IST)
t-max-icont-min-icon

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கடலூரில் நேற்று நடந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ராஜேஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கடலூர்,

உலக புகையிலை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கடலூர் மாவட்ட பொதுசுகாதாரத்துறையும், கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கடலூரில் நேற்று நடந்தது.

கடலூர் டவுன் ஹாலில் இருந்து பேரணி புறப்பட்டது. கலெக்டர் ராஜேஷ் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு புகையிலை ஒழிப்பு கோ‌ஷங்களை முழங்கியவாறு நடந்து வந்தனர்.

பான்பராக் போடாதே, குட்கா போடாதே, வாயில் புற்றுநோயை வாங்காதே, புகையிலையை மெல்லாதே, புற்றுநோயை வாங்காதே என்பன போன்ற கோ‌ஷங்கள் பேரணியில் முழங்கப்பட்டது. பேரணி பாரதி சாலை வழியாக கடலூர் அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது.

இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாதவி, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவஹர்லால், கொள்ளைநோய் தடுப்பு அலுவலர் டாக்டர் மனோகரன், மாவட்ட மலேரியா அலுவலர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story