சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; ஆசிரியர் பலி


சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; ஆசிரியர் பலி
x
தினத்தந்தி 1 Jun 2017 4:59 AM IST (Updated: 1 Jun 2017 4:58 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள வடசிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சபிள்ளை மகன் இளங்கோவன் (வயது 34). இவரது மனைவி சிவப்பிரியா(30). இவர்களுக்கு 7 வயதில் கவிநயா என்ற மகளும், 3 வயதில் மகிழ்வேலன் என்ற மகனும் உள்ளனர். இளங்கோவன் தேவபாண்டலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சிக்கு சென்றார்.

அங்கு வேலைகளை முடித்துவிட்டு மாலையில் சங்கராபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மேலேரி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே, சங்கராபுரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

ஆசிரியர் பலி

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான இளங்கோவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து சிவப்பிரியா சங்கராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை தேடி வருகிறார்.



Next Story