உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 6, 7–ந் தேதிகளில் நடக்கிறது


உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 6, 7–ந் தேதிகளில் நடக்கிறது
x
தினத்தந்தி 2 Jun 2017 1:45 AM IST (Updated: 1 Jun 2017 8:14 PM IST)
t-max-icont-min-icon

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 6, 7–ந் தேதிகளில் நடக்கிறது.

திசையன்விளை,

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 6, 7–ந் தேதிகளில் நடக்கிறது.

சுயம்புலிங்க சுவாமி கோவில்

தென் தமிழகத்தில் உள்ள சிவ ஆலங்களில் புகழ்பெற்றது உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இந்த கோவிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று.

இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா வருகிற 7–ந் தேதி (புதன்கிழமை) தொடங்கியது. இதையொட்டி 7–ந் தேதி காலையில் மங்கள இசை, இரவு துரைப்பாண்டியன், மணிமுகேஷ், ஜோதி ராமலிங்கம், கண்ணன், திருமணி ஆகியோரின் பக்தி சொற்பொழிவு பல்வேறு தலைப்புகளில் நடக்கிறது.

இரவு 12 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நள்ளிரவு 2 மணிக்கு சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

முன்னதாக 6–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு கோவில் வளாகத்தில் சமய சொற்பொழிவு, தேவார இன்னிசை, பக்தி இன்னிசை கச்சேரி, வில்லிசை ஆகியன நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்துள்ளார்.

Next Story