சோழவரம் அருகே 2 பேரை அரிவாளால் வெட்டியவர் கைது
சோழவரத்தை அடுத்த பெரிய காலனியை சேர்ந்தவர் பொன்னுரங்கம், ஒரக்காடு சாலையில் ‘ஹார்டுவேர்ஸ்’ கடை வைத்துள்ளார்.
மீஞ்சூர்,
நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்த பொன்னுரங்கத்துடன் அவரது நண்பர் விஜயன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி(வயது 39) திடீரென தகராறில் ஈடுபட்டு பொன்னுரங்கத்தையும், விஜயனையும் அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த பொன்னுரங்கம், விஜயன் இருவரையும் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து சோழவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்கரவர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story