திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்– கார் மோதல்; கடைக்காரர் பலி


திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்– கார் மோதல்; கடைக்காரர் பலி
x
தினத்தந்தி 2 Jun 2017 3:45 AM IST (Updated: 2 Jun 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்– கார் மோதிய விபத்தில் கடைக்காரர் பலியானார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 35). இவர் மணவாளநகரில் டைல்ஸ் கடை வைத்துள்ளார். இவருக்கு மனைவியும், 6 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமார் வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் செவ்வாப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

புட்லூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். விபத்து ஏற்படுத்திய டிரைவர் காரை நிறுத்தாமல் சென்னை நோக்கி வேகமாக ஓட்டி சென்றார். இது பற்றி உடனடியாக வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த மர்ம நபர் புதுச்சத்திரம் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story