மத்திய அரசை கண்டித்து வக்கீல்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து வக்கீல்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2017 3:30 AM IST (Updated: 2 Jun 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து விருத்தாசலத்தில் வக்கீல்களும், பரங்கிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு எதிராக, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்திலும் இதற்காக மத்திய அரசை கண்டித்து நூதன போராட்டங்கள் நடந்து வருகிறது.

கடந்த 28-ந் தேதி இரவு, மத்திய அரசு கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாட்டு இறைச்சி உணவு திருவிழா நடத்தப்பட் டது. இதற்கு ஏற்பாடு செய்த மாணவர் சூரஜ் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்தும், இறைச்சிக் காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்தும் விருத்தாசலம் நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் அம்பேத்கர் தலைமை தாங்கினார். வக்கீல்கள் மணிகண்டராஜன், புஷ்பதேவன், மணிகண்டன், இளையராஜா, கருணாநிதி, செந்தில், ராஜ்மோகன், மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

பரங்கிப்பேட்டை

இதேபோல் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து பரங்கிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் பரமானந்தம், வேல்முருகன், சிவா, ஆழ்வார், விஜய், கவுஸ்முகமது, வினோபா, மனசூர், ஆனந்தன், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story