குமரி மாவட்டத்தில் சாரல் மழை: சிற்றாறு–1 அணைப்பகுதியில் 36.2 மி.மீ. பதிவு


குமரி மாவட்டத்தில் சாரல் மழை: சிற்றாறு–1 அணைப்பகுதியில் 36.2 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 2 Jun 2017 3:00 AM IST (Updated: 2 Jun 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. சிற்றாறு–1 அணைப்பகுதியில் 36.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

நேற்று காலையில் இருந்து மதியம் வரை நாகர்கோவில் நகரில் வெயில் இருந்தது. மதியம் சுமார் 1 மணி அளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சாரல் மழையாக சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. இந்த மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டது.

36.2 மி.மீட்டர் பதிவு

நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டப் பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:–

பேச்சிப்பாறை–31, பெருஞ்சாணி–25, சிற்றாறு 1–36.2, சிற்றாறு 2–6.2, மாம்பழத்துறையாறு–3, பாலமோர்–8.4, ஆணைக்கிடங்கு–4, கோழிப்போர்விளை–6.4, முள்ளங்கினாவிளை–6, புத்தன் அணை–24.8, திற்பரப்பு–2.2 என்று பதிவாகி இருந்தது.

மகிழ்ச்சி

இந்த மழையின் காரணமாக நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 122 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 65 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு 96 கன அடியும், சிற்றாறு–1 அணைக்கு 6 கன அடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 3 கன அடியும் தண்ணீர் வருகிறது. சிற்றாறு–2 அணைக்கு 17 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் கன்னிப்பூ சாகுபடியை மேற்கொள்ள முடியுமா? முடியாதா? என்ற தவிப்பில் இருந்த விவசாயிகளும், குடிநீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story