பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்


பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2017 4:00 AM IST (Updated: 2 Jun 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழை 2017 தொடர்பாக எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகள், ஓடைகள், குளம் மற்றும் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும். பழுது ஏற்பட்டுள்ள மதகுகளை பராமரிப்பு செய்து, வெள்ளநீர் பாதுகாப்பாக வெளியேற அமைப்புகளை உருவாக்குதல், வெள்ளத் தடுப்புக்காக மணல் மூட்டைகளை தேவையான அளவுக்கு வைத்துக்கொள்ளுதல், பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுதல், தேவையான மருந்து பொருட்களை இருப்பில் வைத்துக்கொள்ளுதல், வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை வெளியேற்றி மேடான பகுதிகளில் பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு இடங்களை தேர்வு செய்துவைத்தல் போன்றவைகளை தயார் செய்து வைத்துக்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

கட்டணமில்லா தொலைபேசி எண்

மேலும் தொற்று நோய் ஏற்படா வண்ணம் தேவையான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் கையிருப்பில் வைத்துக்கொள்ளுதல், பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், போக்குவரத்து சரிசெய்தல், வெள்ள நீரை வெளியேற்ற தேவையான ஜெனரேட்டர், மோட்டார் மற்றும் பேரிடர் காலங்களில் தேவைப்படும் எந்திரங்கள் வைத்துக்கொள்ளவும், மின்தடை ஏற்பட்டால் உடனே சரிசெய்ய ஊழியர்களை வைத்துக்கொள்ளவும், வெள்ள காலங்களில் ஆற்றில் வரும் கூடுதல் தண்ணீரின் அளவை கண்காணித்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை தெரியப்படுத்துவதுடன் மழை வெள்ள காலங்களில் உதவி தேவைப்படுவோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அவசர உதவி கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு உதவி மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என எடுத்துரைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் அல்தாப், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தங்கமுத்து. வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை அலுவலர் அப்துல்பாரி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story