கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம் வெற்றி பெற்ற உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை


கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம் வெற்றி பெற்ற உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை
x
தினத்தந்தி 2 Jun 2017 4:15 AM IST (Updated: 2 Jun 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

புதுவாக்காடு கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட புதுவாக்காடு கிராம மக்கள் சார்பாக கடந்த 2 ஆண்டுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. 3-ம் ஆண்டாக நேற்று மாட்டுவண்டி பந்தயம் அறந்தாங்கி-நாகுடி சாலையில் நடைபெற்றது. பெரிய மாடு, கரிச்சான் மாடு என 2 பிரிவுகளாக இந்த பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 8 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த பந்தயத்தில் முதல் பரிசை மருங்கூர் இ.எம்.எஸ். மாடுகள் தட்டிச் சென்றது. அதன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. 2-ம் பரிசு பெற்ற வெள்ளூளாளபட்டி பூஞ்சோலை ஜெயகண்ணனுக்கு ரூ.9 ஆயிரத்து 500-ம், 3-ம் இடம் பிடித்த அடம்பூர் தங்கராஜாவுக்கு ரூ.9 ஆயிரமும் பரிசு தொகையாக வழங்கப்பட்டன.

கரிச்சான் மாடு

அதேபோல கரிச்சான் மாடுகள் பிரிவில் 6 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இப்பிரிவில் முதல் பரிசை செல்வநேந்தல் சுந்தரம் மாடுகளும், 2-ம் பரிசை மாவிளங்காவயல் முருகேசன் மாடுகளும், 3-ம் பரிசை மாவிளங்காவயல் பெரிய அய்யனார் மாடுகளும் பிடித்தன. அவர்களுக்கு பரிசுத்தொகை முறையே ரூ.5 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.3ஆயிரம் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை புதுவாக்காடு கிராம மக்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story