ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக 51-வது நாளாக போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 51-வது நாளாக பொதுமக்கள் போராடி வருகிறார்கள். இதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என்று எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநிலத்தலைவர் பேசினார்.
வடகாடு,
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைக்கண்டித்து, முதல் கட்டமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த திட்டம் கொண்டு வரப்படாது என்று மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அவர்களிடம் உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த திட்டத்தை மத்திய அரசு மீண்டும் கையில் எடுத்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதை கண்டித்தும், அந்த திட்டத்துக்கு எதிராகவும் கடந்த மாதம் 12-ந் தேதி 2-ம் கட்டமாக அப்பகுதி மக்கள் போராட்டத்தை தொடங்கினர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
51-வது நாளாக போராட்டம்
நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே நேற்று 51-வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்றது. அப்போது, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில், எஸ்.டி,பி,ஐ. மாநிலத் தலைவர் தெஹ்லான் பார்கவி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து பல நாட்களாக போராடி வரும் மக்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. காவிரி நதிநீர் பிரச்சினை முதல் அனைத்து பிரச்சினைகளிலும் தீர்வு காணாமல் தமிழக மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள். மக்கள் வசிக்கும் பகுதியில் இதுபோன்று எரிவாயு திட்டங்களை செயல்படுத்தக்கூடாது. தங்களின் வாழ்வாதாரத்தை காக்க போராடிவரும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என்றார்.

Related Tags :
Next Story