புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 2 Jun 2017 4:00 AM IST (Updated: 2 Jun 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

வரதராஜன்பேட்டை,

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆண்டிமடம் அணிகுதிச்சான் அரசு ஆரம்ப சுகாதார மையம் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு அரசு தொழிற்பயிற்சி மைய முதல்வர் சுப்ரமணி தலைமை தாங்கினார். அணிகுதிச்சான் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அசோக சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் செல்வமணி விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தொழிற்பயிற்சி மைய மாணவர்கள் கலந்து கொண்டு புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். கூவத்தூர் அரசு தொழிற் பயிற்சி மையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கூவத்தூர் கடை வீதி மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று தொழிற்பயிற்சி மையத்தில் முடி வடைந்தது. மேலும் பொதுமக்களுக்கு புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், பயிற்சி மைய அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆண்டிமடம் வட்டாரத்திற்குட்பட்ட ஆண்டிமடம், வரதராஜன்பேட்டை, இடையகுறிச்சி, மருதூர், வாரியங்காவல் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.


Related Tags :
Next Story