மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 900 கனஅடியாக குறைந்தது


மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 900 கனஅடியாக குறைந்தது
x
தினத்தந்தி 2 Jun 2017 4:15 AM IST (Updated: 2 Jun 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 900 கனஅடியாக குறைந்தது.

பென்னாகரம்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் கொட்டியது. மேலும் பெண்கள் குளிக்கும் பகுதியிலும் தண்ணீர் கொட்டியது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது குறைந்துள்ளது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுவில் அதிகாரிகள் அளந்து கண்காணித்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,000 கனஅடியாக வந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 900 கனஅடியாக குறையத்தொடங்கியது. கோடை விடுமுறை முடிவடைய 5 நாட்களே உள்ள நிலையில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறையத்தொடங்கியது. நேற்று 2 ஆயிரத்திற்கும் குறைவான சுற்றுலா பயணிகளே வந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

போலீசார் அறிவுறுத்தல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவிகள் 2 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்ததால் அருவிகள், காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று வருகின்றனர். சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக குளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். மேலும் பாதுகாப்பு உடை (லைப்ஜாக்கெட்) அணிந்து செல்லுமாறு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அறிவுறுத்தினர்.


Related Tags :
Next Story