மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்


மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 2 Jun 2017 3:19 AM IST (Updated: 2 Jun 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு,

மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

7 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம்

ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி முதல்–மந்திரியாக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பெங்களூருவில் வீடு வீடாக சென்று மக்களுக்கு தெரிவிக்க அக்கட்சி நிர்வாகிகள் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். அந்த நடைபயணத்தின் தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் குமாரசாமி கலந்து கொண்டு, நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:–

கர்நாடகத்தில் இதுவரை நான் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளேன். நான் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்துகிறார்கள். தேர்தல் வரும்போது இதுபற்றி ஆலோசித்து முடிவு எடுப்பேன். தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவை எதிர்கொள்ள நான் கட்சியை பலப்படுத்தி வருகிறேன்.

தவறான ஆட்சி நிர்வாகம்

பெங்களூருவில் வளர்ச்சி என்ற பெயரில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் அதிகளவில் முறைகேடு செய்துள்ளன. பெங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா நிர்வாகம் செய்தபோது, ஆவணங்கள் தீப்பிடித்து எரிந்தன. இப்போது காங்கிரசும் முறைகேடு செய்து வருகிறது. இது அனைவருக்கும் தெரிந்த வி‌ஷயம். தேசிய கட்சிகளின் தவறான ஆட்சி நிர்வாகம் மற்றும் நான் முதல்–மந்திரியாக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க இந்த நடைபயணம் தொடங்கப்பட்டுள்ளது.

இன்னும் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று இந்த அரசு காத்திருக்கிறது என்று தெரியவில்லை. மத்திய அரசை எதிர்பார்க்காமல், மாநில அரசே உடனடியாக விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கர்நாடக மேல்–சபை தலைவர் சங்கரமூர்த்திக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ் கடிதம் கொடுத்துள்ளது. இன்னும் எந்த கட்சியும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. வாக்கெடுப்பின்போது இதுபற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story