கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க பயனாளிகள் தேர்வு


கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க பயனாளிகள் தேர்வு
x
தினத்தந்தி 2 Jun 2017 4:12 AM IST (Updated: 2 Jun 2017 4:11 AM IST)
t-max-icont-min-icon

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கறிக்கோழி மற்றும் நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

தேனி,

இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கறிக்கோழி மற்றும் நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்த பண்ணைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 2017–18–ம் ஆண்டுக்கு கறிக்கோழி மற்றும் நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் நபார்டு வங்கி மூலம் மானியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் தனிநபர் வங்கிக் கடன் உதவி பெற்றும் இந்த தொழிலை தொடங்கலாம்.

கோழி வளர்ப்பு பயிற்சி

இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோழி வளர்ப்பு முறை பயிற்சி வழங்கப்படும். தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், புதிய தொழில் முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களை அணுகி, இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story