தூத்துக்குடி மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;–
கால அவகாசம் நீட்டிப்பு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கால அவகாசம் தற்போது வருகிற 15–ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
8–ம் வகுப்பு மற்றும் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஷ்ஷ்ஷ்.sளீவீறீறீtக்ஷீணீவீஸீவீஸீரீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில், எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று விவரம் குறிப்பிட வேண்டும்.
கலந்தாய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், அவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்ப கட்டணம் அனைத்தும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மதிப்பெண் மற்றும் இன ஒதுக்கீட்டின்படி மாவட்ட கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல் இதே இணையதளத்தில் வெளியிடப்படும். தரவரிசை பட்டியலின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விண்ணப்பித்த மாணவர்கள் கோரம்பள்ளம், தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
இதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், மாற்றுச்சான்றிதழ், 8–ம் வகுப்பு மற்றும் 10–ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், சிறப்புநிலை முன்னுரிமை இருப்பின் அதற்கான சான்று போன்ற சான்றிதழ்களின் அசல் மற்றும் 5 நகல்கள், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
சலுகைகள்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை, பஸ் கட்டண சலுகை, இலவச சைக்கிள், மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், சீருடைகள், காலணி ஆகியவை வழங்கப்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு 0461–2340133 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன் அடையலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story