பாளையங்கோட்டையில் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்
பாளையங்கோட்டையில், மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தியர்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,

மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்
பாளையங்கோட்டை மகாராஜ நகர் ரெயில்வே கேட் அருகில் அரசு டாஸ்மாக் மதுக்கடை மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடம் அமைந்துள்ளது. இந்த கடையை மூட வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாணவர் அணி சார்பில் நேற்று மகாராஜ நகர் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தினர்.
மாவட்ட மாணவர் அணி செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமையில் விஜி தேவேந்திரன், கார்த்திகேயன், பரத், அறிவாளன், ஸ்டீபன், அரி, ராபர்ட் உள்ளிட்டோர் நேற்று கட்சி கொடிகளுடன் மதுக்கடையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர் கடைக்குள் திடீரென்று நுழைந்த அவர்கள், தாங்கள் கையில் கொண்டு வந்திருந்த சங்கிலியால் கடையின் கதவில் மாட்டி பூட்டு போட முயற்சி செய்தனர்.
9 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பூட்டு போட்டுக் கொண்டிருந்த மாணவர்களை தடுத்து நிறுத்தியதுடன் அவர்களை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட முத்துப்பாண்டியன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
மூட வேண்டும்
இதுகுறித்து மாணவர் அணி செயலாளர் முத்துப்பாண்டியன் கூறுகையில், மகாராஜ நகரில் மதுக்கடை உள்ள பகுதி பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி ஆகும். இந்த வழியாக 3 முக்கிய பள்ளிக்கூடங்களுக்கு மாணவ, மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர். மேலும் ஆஞ்சநேயர் கோவிலுக்கும் பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
இந்த பகுதியில் மது அருந்தி செல்பவர்களால் பல்வேறு இடையூறுகள், விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்களுக்கு பல்வேறு வகையிலும் இடையூறாக இருக்கும் மகாராஜ நகர் மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும்’’ என்றார்.

Related Tags :
Next Story