தென்காசியில் டெங்கு காய்ச்சலுக்கு 9–ம் வகுப்பு மாணவன் பலி


தென்காசியில் டெங்கு காய்ச்சலுக்கு 9–ம் வகுப்பு மாணவன் பலி
x
தினத்தந்தி 3 Jun 2017 1:30 AM IST (Updated: 2 Jun 2017 6:45 PM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் டெங்கு காய்ச்சலுக்கு 9–ம் வகுப்பு மாணவன் பலியானான்.

தென்காசி,

தென்காசியில் டெங்கு காய்ச்சலுக்கு 9–ம் வகுப்பு மாணவன் பலியானான்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

9–ம் வகுப்பு மாணவன்

தென்காசி தைக்கா தெருவைச் சேர்ந்தவர் முகமது கனி. இவருடைய மகன் பீர்முகமது (வயது 14). இவன் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9–ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு பீர்முகமதுவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே தென்காசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அங்கு மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் காய்ச்சல் குறைந்தபாடில்லை. எனவே பீர்முகமதுவை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் பீர்முகமது பரிதாபமாக இறந்தான்.

இறந்த பீர்முகமது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. டெங்கு காய்ச்சல் வந்த 3 நாட்களில் மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story