தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 2–வது மின்உற்பத்தி எந்திரம் பழுது


தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 2–வது மின்உற்பத்தி எந்திரம் பழுது
x
தினத்தந்தி 3 Jun 2017 1:30 AM IST (Updated: 2 Jun 2017 7:07 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 2–வது மின்உற்பத்தி எந்திரம் நேற்று பழுதடைந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 2–வது மின்உற்பத்தி எந்திரம் நேற்று பழுதடைந்தது.

அனல்மின்நிலையம்

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் உள்ளன. இதில் 1–வது மின்உற்பத்தி எந்திரம் கடந்த 25–ந்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

3–வது மின்சார உற்பத்தி எந்திரம் கடந்த 31–ந்தேதி முதல் முழுபராமரிப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் 2, 4, 5 ஆகிய மின்உற்பத்தி எந்திரங்களில் மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

பழுது

இந்த நிலையில் நேற்று காலையில் 2–வது மின்சார உற்பத்தி எந்திரத்தில் உள்ள கொதிகலன் குழாயில் திடீரென ஓட்டை விழுந்தது. இதனால் அந்த எந்திரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அனல்மின்நிலைய ஊழியர்கள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 1–வது மின்சார உற்பத்தி எந்திரம் நேற்று மீண்டும் இயக்கப்பட்டது. தற்போது 2, 3–வது எந்திரங்கள் மட்டும் இயங்காமல் உள்ளன. இதன்மூலம் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

Next Story