ஆலங்குளத்தில் தொண்டன் படம் வெற்றி விழா இயக்குனர் சமுத்திரக்கனி பங்கேற்பு
ஆலங்குளத்தில் உள்ள டி.பி.வி.மல்டிபிளெக்ஸ் திரையரங்கில் தொண்டன் பட வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் சமுத்திரக்கனி கலந்து கொண்டார்.
ஆலங்குளம்,

தொண்டன் திரைப்படம்
இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி, நடித்த தொண்டன் திரைப்படம், கடந்த 26–ந் தேதி தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியானது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் வெற்றிவிழா, ஆலங்குளத்தில் உள்ள டி.பி.வி.மல்டிபிளக்ஸ் திரையரங்கில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இயக்குனர் சமுத்திரக்கனி, நடிகர் விக்ராந்த், தயாரிப்பாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமுத்திரக்கனி பேச்சு
இவ்விழாவில், இயக்குனர் சமுத்திரக்கனி பேசியதாவது:– என்னுடைய இயக்கத்தில் உருவான தொண்டன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல படங்கள் வெளியான போதிலும், தொண்டன் படத்திற்கு திரையரங்குகளில் கூட்டம் குறையவில்லை. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்காக என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படம் வெற்றிபெற ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கும் எனது படக்குழுவினர் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன், என்று அவர் பேசினார்.
பின்னர், ரசிகர்களுடன் அமர்ந்து திரையரங்கில் தொண்டன் திரைப்படத்தை அவர் பார்த்தார். இந்த விழாவில், திரையரங்கு உரிமையாளர்கள் கருணாகரராஜா, வைகுண்டராஜா, அவர்களுடைய மகன்கள் வெற்றிவேல், திவாகர், விபின், நவீன் மற்றும் திரையரங்கு மேலாளர்கள் தங்கவேல், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story