மாதாந்திர பராமரிப்புக்காக இன்று மின்சாரம் நிறுத்தம்


மாதாந்திர பராமரிப்புக்காக இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 3 Jun 2017 4:00 AM IST (Updated: 3 Jun 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர பராமரிப்புக்காக ஆண்டிமடம், பாப்பாக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம் பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஜெயங்கொண்டம்,

ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சாந்தி (பொருப்பு) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஆண்டிமடம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளைம், பெரியகிரு‌ஷணாபுரம், வரதராஜன்பேட்டை, அழகாபுரம், சிலம்பூர், திராவிடநல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, கூவத்தூர், குளத்தூர், ராங்கியம், பெரிகருக்கை, நாம்பந்தல், ஸ்ரீராமன் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்வினியோகம் இருக்காது.

இதேபோல் பாப்பாகுடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையார்பாளையம், குலோத்துங்கநல்லூர், தென்னவநல்லூர், வேம்புக்குடி, அழகர்கோயில், சலுப்பை, வெட்டியர்வெட்டு, இருதயபுரம், இளையபெருமாள்நல்லூர், கங்கைகொண்டசோழபுரம், வீரபோகம், காட்டுகொல்லை, குறுக்குரோடு, தழுதாழைமேடு, வளவனேரி, வங்குடி, இறவாங்குடி, ஏ.என்.பேட்டை, திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி, வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

செந்துறை...

செந்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் செந்துறை, இலங்கைச்சேரி, நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர், பாசாளம், சமத்துவபுரம், ஆதிகுடிகாடு, கீழராயம்புரம், ஆனந்தவாடி, அயனாத்தூர், சென்னிவனம், சோழன்குறிச்சி, ராயம்புரம், கட்டையன்குடிகாடு, அகரம், மேட்டுபாளையம், காவேரிபாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

ஜெயங்கொண்டம்...

ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஜெயங்கொண்டம் தா.பழூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், உட்கோட்டை, உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, தா.பழூர், சிலால், வாணதிரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, வுமீ. நத்தம், நாயகனைபிரியாள், பி.பி.நல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி, பெரியதத்தூர், தென்னூர், சூரகுழி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story