கள்ளக்குறிச்சியில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சியில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2017 4:00 AM IST (Updated: 3 Jun 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அனைத்து கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மணல் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அனைத்து கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மணல் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் கே.பி.பாண்டியன் தலைமை தாங்கினார். கட்டிட தொழிலாளர் சங்க மாரிமுத்து, செயலாளர் ரத்தினம், துணைத் தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரகுபதி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மணல் தட்டுப்பாடு காரணமாக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் பகுதிகளை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் வேலை இழந்து குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மணல் தட்டுப்பாட்டை போக்க கள்ளக்குறிச்சி பகுதியில் செல்லும் கோமுகி, மணிமுக்தா, தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் மணல் குவாரி அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சங்க பொருளாளர் கலியமூர்த்தி உள்பட டிப்பர் லாரி உரிமையாளர்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story