பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
பழனியை அடுத்துள்ள பொன்னாபுரத்தில் ரெயில்வே கேட் அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பழனி ரெயில்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.
பழனி,
பழனியை அடுத்துள்ள பொன்னாபுரத்தில் ரெயில்வே கேட் அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பழனி ரெயில்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் செல்லமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன், ஒன்றியக்குழு செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பொன்னாபுரத்தில் தரைப்பாலம் அமைக்கும் திட்டத்தை ரெயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும். மேலும் அங்கு ரெயில்வே கேட் அமைத்து கேட்கீப்பரை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் கிளை செயலாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story