ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் சங்கு ஊதி நூதன போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் சங்கு ஊதி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2017 3:30 AM IST (Updated: 3 Jun 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சங்கு ஊதி நூதன போராட்டத்தை நடத்தினர்.

வடகாடு,

வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் 2-வது கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டம் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நூதன போராட்டம்

இந்தநிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 52-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, பல நாட்களாக போராடும் மக்களை கண்டுகொள்ளாத அரசுகளை கண்டிக்கும் விதமாக, மத்திய, மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நெடுவாசல் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்காமல் தூங்குவது போல சித்தரித்தும், அப்படி தூங்கும் அரசுகளை சங்கு ஊதி எழுப்புவதைப்போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story