போலீசாரை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு


போலீசாரை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு
x
தினத்தந்தி 3 Jun 2017 5:02 AM IST (Updated: 3 Jun 2017 5:02 AM IST)
t-max-icont-min-icon

சயான் கோலிவாடா பஞ்சாபிகேம்பில் தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர்.

மும்பை,

சயான் கோலிவாடா பஞ்சாபிகேம்பில் தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர்.

போலீஸ் தடியடி

மும்பை சயான்கோலிவாடா பஞ்சாபிகேம்பில் 25 கட்டிடங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கட்டிடங்கள் குடியிருப்பதற்கு தகுதியற்றவை என மாநகராட்சி ஆய்வில் தெரியவந்ததையடுத்து அங்கு வசிப்பவர்களை மழைக்காலத்திற்கு முன் காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் குடியிருப்புவாசிகள் யாரும் காலி செய்யாததால் நேற்றுமுன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் பஞ்சாபிகேம்ப் கட்டிடங்களில் குடிநீர் மற்றும் மின்சார இணைப்பை துண்டிக்க சென்றனர். அப்போது போலீசாருக்கும், குடியிருப்புவாசிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கடையடைப்பு

போலீசார் குடியிருப்புவாசிகளை தடியடி நடத்தி கலைத்தனர். போலீசார் குடியிருப்புவாசிகள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று சயான் கோலிவாடா பஞ்சாபிகேம்பில் வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர். மேலும் குடியிருப்புவாசிகள் போலீசார் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நிலையில், பஞ்சாபிகேம்ப் குடியிருப்புவாசிகள் சார்பில், கட்டிடங்களுக்கு இடிப்பதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு அந்த கட்டிடங்களை இடிப்பதற்கு வருகிற 7–ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதை கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பஞ்சாபிகேம்ப் குடியிருப்புவாசிகளிடம் தெரிவித்தார்.


Next Story