‘பேலியோ டயட்’டின் இரு பக்கங்கள்
புதிதாக பலராலும் பரபரப்பாகப் பின்பற்றப்பட்டு வரும் உணவுமுறை, ‘பேலியோ டயட்’. இது, மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கும் முன் பின்பற்றிய உணவு முறை என்கிறார்கள்.

அதாவது, வேட்டையாடிய விலங்குகள், ஆற்றிலும், குளத்திலும், கடலிலும் பிடித்த மீன்கள், மரத்தில் இருந்து புதிதாய் பறித்த பழங்கள், உரம், பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தாமல் விளைந்த காய்கறிகளை மட்டும் உண்ணும் முறை.
ஒரு தரப்பு, பேலியோ டயட்டை தீவிரமாகப் பின்பற்றத் தொடங்கிவிட்டாலும், இன்னொரு தரப்பு கொஞ்சம் தயங்கியே நிற்கிறது. சரி, இந்த உணவுமுறையைப் பின்பற்றுவதும், பின்பற்றாததும் அவரவர் விருப்பம்.
அதற்கு முன், ‘பேலியோ டயட்’டில் அனுமதிக்கப்படும் உணவுகள் என்னென்ன, அனுமதிக்கப்படாத உணவுகள் என்னென்ன என்றும், பேலியோ டயட்டின் சிறப்புகள் என்னென்ன, இதன் சங்கடங்கள் என்னென்ன என்று இந்த உணவுமுறையின் இரு பக்கங்களையும் பார்க்கலாம்...
‘பேலியோ டயட்’டில் அனு மதிக்கப்படும் உணவுகள்
* புல்லை உண்ணும் விலங்குகளின் இறைச்சி.
* ஆற்று மீன், கடல் உணவுகள் (வேதிப் பொருட்களின் தாக்கம் இல்லாமல் இருக்க வேண்டும், செயற்கை உணவூட்ட முறை களால் வளர்க்கப்படாததாக இருக்க வேண்டும்.)
* அனைத்து புதிய பழங்கள்.
* பாதாம் போன்ற அனைத்து இயற்கையான கொட்டைப்பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள்.
* அனைத்து இயற்கை வேளாண்மை காய் கறிகள்.
‘பேலியோ டயட்’டில் அனுமதிக்கப்படாத உணவுகள்
* அரிசி, கோதுமை, பார்லி போன்ற அனைத்துத் தானியங்களும்.
* அனைத்து பருப்பு வகைகள்.
* பால் மற்றும் தயிர், பனீர், பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்கள்.
* சுத்திகரிக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட, பேக்கேஜ் செய்யப்பட்ட அனைத்து உணவுப்பொருட்கள்.
* அனைத்து பிரெட்கள் மற்றும் பேக்கரி தயாரிப்புகள்.
* சுத்திகரிக்கப்பட்ட அனைத்து எண்ணெய் கள், வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி போன்ற ‘பிராசஸ்’செய்யப்பட்ட கொழுப்புகள்.
‘பேலியோ டயட்’டின் நன்மைகள்
* பேலியோ டயட் உணவுகள் எல்லாம் இயற்கையானவை, வேதித் தாக்கம் இல்லாதவை என்பதால், சுத்திகரிக்கப்பட்ட, பிராசஸ் செய்யப்பட்ட உணவுப்பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை, இந்த வகை உணவுகளால் வருவதில்லை.
* பிராசஸ் செய்த சர்க்கரை, சர்க்கரை சேர்த்த பழரசங்களுக்கு அனுமதியில்லை என்பதால் எடைக் குறைப்புக்கு உதவுகிறது.
* ‘குளூட்டன்’ புரதம் நிறைந்த உணவுப் பொருட்களுக்கு பேலியோ டயட்டில் அனு மதியில்லை என்பதால், கோதுமை மற்றும் ‘குளூட்டன்’ ஒவ்வாமை உள்ள நபர்களுக்கு ஏற்ற உணவுமுறையாக ‘பேலியோ டயட்’ உள்ளது.
‘பேலியோ டயட்’ சங்கடங்கள்
* பொதுவாக, இயற்கை வேளாண் உணவுகளின் விலை அதிகமாக இருக்கிறது.
* இந்த வகை உணவுகள் எல்லா இடங்களிலும் சாதாரணமாகக் கிடைப்பதில்லை என்பதால், அதிகம் பயணம் செய்பவர்கள் ‘பேலியோ டயட்’டை பின்பற்றுவது கடினம்.
* புல்லை மட்டும் உண்ணும் விலங்குகளின் இறைச்சி, செயற்கை மணம், சர்க்கரை, கெடாமல் பாதுகாக்கும் பொருள் இல்லாத இயற்கைப் பானங்கள் என்று தேடித் தேடி சாப்பிடுவது கடினம். தானியங்களே இல்லாத உணவுமுறைக்கு மாறுவது எளிதல்ல.
* பேலியோ டயட்டை பின்பற்றுவதால் குறையும் எடை, ஒருகட்டத்தில் நின்றுவிடுகிறது. இந்த உணவு முறையிலும், வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்கள், உருளைக் கிழங்கு போன்றவற்றின் வாயிலாக கார்போஹைட்ரேட் அனுமதிக்கப்படுவதே காரணம்.

Related Tags :
Next Story