18 பழையன கழிக்காமல் புதியன கூட்டுவோம்
“புள்ளியியலுக்கு என ஒரு பரிசு நம் பல் கலைக்கழகத்தில் இருக்கிறது சாம்வீர். கண்டிப்பாக நீ அதைப் பெறுவாய் என நான் கனவு கண்டேன்.
“புள்ளியியலுக்கு என ஒரு பரிசு நம் பல் கலைக்கழகத்தில் இருக்கிறது சாம்வீர். கண்டிப்பாக நீ அதைப் பெறுவாய் என நான் கனவு கண்டேன். ஆனால், இன்னும் என் கனவு கனவாகவே இருக்கிறது”, என்றார் பேராசிரியர் சிவா சிறு ஆதங்கத்துடன்.
‘தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழர்’ என்ற பழமொழி பல நேரங்களில் உண்மையாக இல்லாவிட்டாலும், ஒரு கல்லூரி மாணவன் படித்து முடித்து கல்லூரியை விட்டுச் சென்றபின் அக்கல்லூரியின் பல ஆசிரியர்களோடு தோழமை உறவுகொள்வது மிகவும் உண்மை. சென்னையில் ஒரு பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் ஆராய்ச்சி செய்யும் சாம்வீரும் அவனின் கல்லூரிப் பேராசிரியர் சிவாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
“சார், நான்தான் அந்தப் பரிசைப் பெற்றேன்”, என்றான் சாம்வீர் பொறுமையாக. அதைக்கேட்ட பேராசிரியரும், தானே ஒரு நோபல் பரிசைப் பெற்றதைப் போல, “நீ என்ன சொன்ன? இன்னொரு தடவை சொல்லு” என்றார். “சார், நான்தான் பல்கலைக்கழகத்தின் பட்டமேற்படிப்பில் கணிதத்தில் தங்கப் பதக்கத்தைப் பெற்றதோடு, புள்ளியியல் பாடத்துக்கான சிறப்புப்பரிசையும் பெற்றேன்” என்றான்.
திருவிளையாடலில் ஆயிரம் பொற்காசுகளுக்கான பாடலைக் கேட்ட தருமியைப்போல, “எங்கே அந்தச் சான்றிதழ்? நானும் பார்க்கணும். உடனே என்னிடம் காட்டு” என்றார் தன் ஆர்வத்தை அடக்கமுடியாமல்.
இருவரும் சாம்வீரின் கல்லூரி விடுதி அறையிலிருந்து பேசிக்கொண்டிருந்ததால், அவன் தன் சூட்கேஸ் ஒன்றைத் திறந்து ஒரு கட்டு சான்றிதழ்களை வெளியே எடுத்தான். அவனோடு சேர்ந்து அவரும் அந்தக் குறிப்பிட்ட சான்றிதழைத் தேடினார். அவற்றில் பள்ளியிலும், கல்லூரியிலும் அவன் பேச்சு, கதை, கவிதை போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற சான்றிதழ்களுடன், பல்வேறு விளையாட்டுகளிலும், பிற விழாக்களிலும் விருப்பார்வத் தொண்டராகப் (Vo-lu-nt-e-er) பணியாற்றியதற்கான பல பாராட்டுச் சான்றிதழ்களும் இருந்ததால் அவர் தேடியது எளிதில் கிடைக்கவில்லை.
“இவையெல்லாம் குப்பை. இவற்றை ஏன் பத்திரமாக உன் பெட்டியில் வைத்திருக்கிறாய்? பரிசுக்கான சான்றிதழ்களை மட்டும் வை. வேலைக்குப் போகும்போது அவற்றை மட்டுமே கேட்பார்கள்” என்றார், பேராசிரியர் சற்று அழுத்தமாக.
ஆனால், சாம்வீரின் நினைவலைகள் அவனைப் பின்னோக்கி இழுத்துச்சென்றன. அவனால் பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து வெற்றிபெற முடியாவிட்டாலும், போட்டிகள் நடைபெற்றபோது தொண்டனாக உதவ முடிந்ததுடன், எல்லா விளையாட்டுப் போட்டிகளையும் முன் நின்று பார்த்து ரசிக்கவும், முடிவில் முதல்வரின் கையால் பாராட்டுச் சான்றிதழ் வாங்கவும் முடிந்ததை எண்ணி மகிழ்ந்தான். அவன் முகத்தில் பல புன்னகை ரேகைகள் ஓடின.
ஆயிரம் அல்லிகள் நிறைந்த ஒரு குளத்தில் தாமரை மலர் ஒன்றைத் தேடுவதைப் போல அவர் தேட, கடைசியில் அந்த சான்றிதழ் கிடைக்கவும் ‘யுரேகா... யுரேகா’ எனச் சொல்லாமல் துள்ளினார் பேராசிரியர் சிவா. ஒரு மாணவனின் வளர்ச்சியில் சந்தோஷப்படுவதும், அவன் தளர்ச்சியில் தாமும் சிறிது தளர் வதும் உண்மையான ஆசிரியர்களே.
தன் செல்பேசி காமிராவில் அவனின் சான்றிதழைப் படம் எடுத்து தன் வாட்ஸப் குழுவில் உடனே பதிவுசெய்தார். ஆனால், அவனோ இன்னும் அந்த விளையாட்டு விழா நினைவுகளில் இருந்து வெளியே வரவில்லை. கனவு வருங்காலத்துக்கு மட்டுமல்ல, கடந்த காலத்துக்கும்தானே!
வேண்டாத பழையனவற்றை வெளியேற்ற போகித்திருநாள் இருந்தாலும், பழையவை யாவுமே வேண்டாதவை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நேற்றைய நாளிதழ் நாளைக்குப் பழைய பேப்பர் வாங்குபவனிடம் சென்றாலும், ஒவ்வொரு நாளிதழிலும் வரும் முக்கியமானவற்றை வெட்டி, ஒட்டி சேகரித்து வைப்பவர்கள் இன்றும் உண்டு. பிடித்த எழுத்தாளர்களின் தொடர்கதையைத் தொடர்ந்து படித்தாலும், தொடர் முடிந்தவுடன் அவற்றை ஒன்றாக்கிப் புத்தகமாகப் பாதுகாத்து அவ்வப்போது வாசிப்பவர்களும் உண்டு.
முதல் கவிதை, ஓவியம், நாட்டிய உடை, மேடையில் உதிர்ந்த ஒரு சலங்கை மணி என ஒவ்வொன்றாக சேகரித்து வைத்ததைத் திருமணமான முதல் நாளே தன் கணவனிடம் காட்டி மகிழும் பெண்களும் உண்டு. முதல் பொட்டு, சீப்பு, கண்ணாடி, பேனா, பென்சில் என எல்லா முதல் பொருட்களையும் பாதுகாத்து வைக்காததன் காரணம் கேட்டு பெற்றோரிடம் சண்டையிடும் வளர்ந்த குழந்தைகள் பலருண்டு.
மகளின் அரங்கேற்றக் காணொளியை விட, அவள் ஆடாமல் அசைந்த முதல் நடனத்தை அம்மாவும், அப்பாவும் ஓடி ஓடி, ஆடி ஆடிப் பதிவுசெய்த காணொளியையே என்றும் விரும்பி ரசிப்பதுண்டு. ‘ஓல்ட் இஸ் கோல்ட்’ என ஆங்கிலத்தில் சொல்வது போல பழமை என்றும் புதுமையுமானது.
உண்ணும் உணவைக்கூட உடல் அதிலிருக்கும் சத்தையும் சக்தியையும் எடுத்துவிட்டு மிச்சத்தையே வெளியேற்றுகிறது. ஆனால், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பைப் பொறுத்தவரையில், தலையில் இருந்தது தேர்வுத்தாளுக்கு மாறியபின் தலைக்கனமென இறக்கி வைக்கப்படுகிறது.
‘ஏணிப்படிகள் ஏறுவதற்கு மட்டுமல்ல, இறங்குவதற்கும்தான்’ என்பதை மறந்து, ஒவ்வொரு படியையும் ஆண்டின் இறுதியில் மாணவர்கள் எட்டி உதைப்பதைப் பார்க்கிறோம். நேற்று எழுதிய தேர்வைக் கூட இன்று அதே அளவில் எழுத முடியுமா என்பது பலருக்கும் கேள்விக்குறியே. படிக்கும் போதுகூட அன்றாட பாடத்தை அன்றே படிப்பதுடன், அதுவரை எடுத்த முந்தைய பாடங்களையும் அவ்வப்போது படித்துவந்தால் மறக்காமல் இருப்பதுடன் அவை வாழ்வில் எப்போதும் உதவும்.
படித்த பழைய பாடப்புத்தகங்களைக் கூடத்தேர்வு முடிவு வந்தவுடனேயே, பல நேரங்களில் தேர்வு முடிந்தவுடனேயே, பழைய விலைக்குப் போட்டு பக்கோடா வாங்கித் தின்னும் பழக்கம்தான் இன்னும் பலரிடம் உள்ளது. படித்த பாடப்புத்தகங்களைப் பாதுகாப்பாக வைத்து அவ்வப்போது படியுங்கள். மேல் வகுப்புக்குச் செல்லும்போது கீழ்வகுப்புகளில் படித்தவை நல்ல அடித்தளமாக உதவுவதுடன், பரிட்சயமான பழைய பாடங்கள் மீண்டும் பரீட்சைக்கு எனப் படிக்காததால் முன்பு புரியாதது கூட பின்பு நன்கு புரியும். ஒன்பது என்றவுடன் ஒன்றை மறந்துவிட்டால், பத்துக்குப் பதில் பூஜ்ஜியம்தானே மிஞ்சும்?
இரண்டு லட்சம் ஆண்டுகளாகப் பூமியில் வலம்வரும் மனிதன் தன் மரபணு ஞானம் மூலமாகவே தன் சந்ததிக்குப் பாடம் எடுக்கிறான். பிறந்த குழந்தை உடனே அழுவதும் சிரிப்பதும் இதனாலேயே. அதற்கு அம்மாக்கள் பாடம் எடுப்பதில்லை. ஆனால், பல பிறவிகளில் பெற்றதை உள்வாங்கும் மனிதன் இந்தப் பிறவியில் கற்றதை மட்டும் கார்பன்-டை-ஆக்சைடுபோல உடனே வெளியேற்றுவது ஏனோ?
‘நேற்றையும் நாளையும் பற்றி கவலைப்படாமல் இன்று வாழக் கற்றுக்கொள்’ என்பார்கள். அதுவும் ஓரளவு உண்மையே. நமக்கு இன்னலைத் தரும் கவலைகளை மறப்பது நல்லது. ஆனால், இன்பமும் துன்பமும் நிறைந்ததே வாழ்க்கை. இரண்டிலும் நாம் பெற்ற அனுபவங்களே நம்மை நாளைக்குக் கூட்டிச்செல்கின்றன. படித்த பாடமும், படைத்த பாடமும் அதில் அடங்கும்.
புதிய தோசை மாவானாலும் சிறிது பழைய மாவோடு கலந்தால்தான் எளிதில் புளித்து தோசை நன்றாக வரும். அதேபோல புதிய பாலையும் சிறிது பழைய உறை மோரோடு கலந்தால் மட்டுமே நல்ல தயிர் கிடைக்கும். முதன்முதலில் கருவில் உருவான ஸ்டெம் செல் கூட இரண்டிரண்டாகப் பிரிந்து, பலவாகி, பின் பல்வேறு உறுப்புகளாகி ஓர் உடலானாலும், எல்லா செல்களிலும் தன் தனிப்பட்ட முத்திரையான டி.என்.ஏ. இழக்காமல் என்றும் காத்து நிற்கும். இதைப்போல ஒவ்வொரு மாணவரும் ஒவ்வோர் ஆண்டும் தான் கற்றதையும், கற்ற நூல் களையும் வாழ்வில் பாதுகாத்து ஏணிப்படிகளில் ஏறிச்செல்ல வேண்டும்.
புரிந்ததை மூளையில் வைப்போம்.
புத்தகத்தை மூலையில் வைப்போம்!
(தொடர்ந்து சிறகடிப்போம்)

Related Tags :
Next Story