சீறிப்பாயும் ‘சிறப்பு’ கார்!
“கல்லூரிக்கு காரில் செல்வது பழைய ஸ்டைல். கல்லூரியில் கிடைத்த அறிவைக் கொண்டு சொந்தமாக காரை உருவாக்குவதுதான் புதிய ஸ்டைல்”
“கல்லூரிக்கு காரில் செல்வது பழைய ஸ்டைல். கல்லூரியில் கிடைத்த அறிவைக் கொண்டு சொந்தமாக காரை உருவாக்குவதுதான் புதிய ஸ்டைல்” என துடிப்பாகப் பேசுகிறார்கள், திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள். மெக்கானிக்கல் துறையில் கிடைத்த அனுபவம், இவர்களை புதுவகையான பந்தய காரை உருவாக்க வைத்திருக்கிறது. ஒரு கார், இரண்டு வகை என்ஜின் என்பது இவர்களது காரை மேலும் சிறப்பாக்குகிறது.
“இந்தத் தொழில்நுட்பம் பழையது என்றாலும், பந்தய கார்களுக்கு புதிது. அதுவும் எங்களுடைய கண்டுபிடிப்பில்... கார் ஓடிக்கொண்டிருக்கையில் ஒரு என்ஜினை நிறுத்திவிட்டு, மற்றொரு என்ஜினை இயக்கமுடியும். அதனால்தான் தேசிய அளவிலான போட்டியில் 9-வது இடம் கிடைத்தது” என்று உற்சாகமாகப் பேசுகிறார், விக்னேஷ்.
பெட்ரோல்-மின்சாரம், இவை இரண்டிலும் ஓடும் என்ஜினை உருவாக்கிய மாணவர் குழுவின் தலைவரும் இவர்தான். இவருடன் மதனகோபால், நவீன்குமார், பாலாஜி உள்பட 19 மாணவர்களும் குழுவில் அங்கம் வகித்திருக்கிறார்கள். மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படிக்கும் இவர்களின் கூட்டு முயற்சியில் உருவாகி யிருக்கும் காரின் சிறப்பம்சங்கள் குறித்து விக்னேஷ் சொல்லக் கேட்போம்...
“புதிய படைப்புகளை உருவாக்குவதுதான் என்ஜினீயரின் வேலை. அதை கச்சிதமாக முடித்திருக்கிறோம். கல்லூரி மாணவர் களுக்கு இடையிலான பந்தய கார் உருவாக்கும் போட்டி தேசிய அளவில் நடைபெற இருந்தது. அதில் வித்தியாசமான பந்தய காரை காட்சிப்படுத்துவது எங்களுடைய திட்டமாக இருந்தது. அதன்படி உதவிப் பேராசிரியர் சிலம்பரசனின் வழிகாட்டுதலோடு 20 மாணவர்கள் குழுவாக ஒன்றிணைந்து... விதவிதமான தொழில்நுட்பங் களுடன் கூடிய கார்களை வடிவமைக்கத் திட்டமிட்டோம். அப்படி உருவானதுதான் பெட்ரோல் மற்றும் மின்சார என்ஜின்களில் மாறி மாறி இயங்கும் கார். கற்பனையில் உருவாக்குவதை விட, நிஜத்தில் உருவாக்க கடினமாக உழைக்க வேண்டியதாகிவிட்டது. ஏனெ னில் பந்தய கார் 250 கிலோ எடைக்குள் இருக்கவேண்டும். அதற்காக உறுதியான மற்றும் இலகுவான உதிரி பாகங்களை பல இடங்களுக்கு சென்று தேடிப் பிடித்து வாங்கினோம். உதிரி பாகங்களைப் பொருத்துதல், தேவையான இடங்களில் வெல்டிங் செய்தல் என எல்லாமே எங்களுடைய உழைப்புதான். பல மாத உழைப்புக்கு இறுதியில் வெற்றி கிடைத்தது” என்று பேசியவரிடம் சிறப்பு காரின் சிறப்பம்சங்களைப் பற்றி கேட்டோம். அதற்கு பதிலளித்தார்...
“ஒரே காரில் இரண்டு என்ஜின்களை பொருத்தி பந்தயத்திற்காக தயாரித்ததால் இதனை சிறப்பு கார் என்று அழைக்கிறோம். ஒரே நேரத்தில் 2 என்ஜின்களையும் மாற்றி மாற்றி இயக்க, விசேஷமான கிளட்சை தயாரித்துப் பொருத்தினோம். அதன் மூலம் கார் ஓடிக்கொண்டிருக்கையில் பெட்ரோல் என்ஜினை அணைத்து விட்டு, மின்சாரத்தில் இயங்கும் என்ஜினை இயக்க முடியும்.
மேலும் பந்தய காராக இருந்தாலும், எரிபொருளை சேமிக்கும் வகையில் என்ஜின்களை தயாரித்திருக்கிறோம். காரில் பொருத்தப்பட்டிருக்கும் மின்சார பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால், அது தொடர்ந்து 40 கிலோமீட்டர் தூரம் ஓடும். அதேபோல் ஒரு லிட்டர் பெட்ரோலில் 45 கி.மீ. தூரத்தை கடக்க வல்லது. மேலும் பிரேக் பெடலின் கீழ் பகுதி, டிரைவர் இருக்கைக்கு முன்பகுதி, காரின் பக்கவாட்டுப் பகுதி என 3 இடங் களில் ‘கில்லர் சுவிட்ச்’ எனும் புதிய தொழில்நுட்ப அமைப்பை பொருத்தி இருக்கிறோம். கார் விபத்தில் சிக்கினால், ‘கில்லர் சுவிட்சை’ அழுத்தி என்ஜினின் இயக்கத்தை நிறுத்தி விடலாம். டிரைவர் மட்டுமின்றி வெளியே நிற்பவர் களும் கில்லர் சுவிட்சை இயக்கும்படி பொருத்தி இருக்கிறோம். இவ்வளவு தொழில்நுட்பங்களும் ரூ.2 லட்சம் செலவில் தயாராகி இருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துவிட்டது” என்பவர், கார் தயாரிப்பில் கிடைத்த சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவை சுவாரசியமாக இருந்தன...
“என்ஜினீயர் கனவோடுதான் கல்லூரிக்கு வந்தோம். படிப்பை முடித்துவிட்டு என்ஜினீயராக வேலை பார்க்கையில் கிடைக்கும் பணிநிறைவு, கல்லூரி யிலேயே கிடைத்துவிட்டது. சிறப்பு காரை வடிவமைத்து ஓடவைக்க பத்து மாதங்கள் தேவைப்பட்டன. ஆரம்பத்தில் ஒவ்வொரு செயலும் தோல்வி யிலேயே முடிந்தது. ஒருவழியாக காரை முழுமையாகத் தயாரித்து முடித்தோம். அப்போது என்ஜின் மட்டும் இயங்கியது, ஆனால் கார் ஓடவில்லை. அனைவருக்கும் ஏமாற்றம். எனினும் முயற்சியை கைவிடாமல் முயன்றோம். இறுதியில் கார் ஓடியபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தொடர் தோல்விகளுக்குப் பின் கிடைக்கும் வெற்றியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
எங்கள் அணியில் இருந்த மாணவர்களில் பலருக்கு கார் ஓட்டத் தெரியும். ஆனால் மற்ற சொகுசு கார்களை ஓட்டுகையில் கிடைக்காத சுகம், கைப்பட உருவாக்கிய காரில் கிடைத்தது.
சிரமப்பட்டு உருவாக்கிய காரை ஓட்டிப் பார்த்தபோது வித்தியாசமாக இருந்தது. காரை ஓட்டிய போது காரின் எந்தப் பாகம் எப்படி இயங்கும், சிறிய சத்தம் வந்தாலும் எங்கிருந்து வரு கிறது, ஏன் சத்தம் வருகிறது என்ற சிந்தனை மனதில் ஓடிய வண்ணமே இருந்தது. அதுதானே ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயருக்கும் தேவை!” என மனம் நெகிழ்ந்தவர், தேசிய அளவிலான போட்டியில் கிடைத்த வெற்றியை பகிர்ந்து கொள்கிறார்.
“போட்டி 2 கட்டங்களாக நடைபெற்றது. ஆந்திராவில் நடைபெற்ற முதல்கட்டப் போட்டியில் நாடு முழுவதில் இருந்தும் 150-க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் பங்கேற்றன. அதில் தேர்வான 45 குழுக்களுக்கு இரண்டாம் கட்டமாக உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் போட்டி நடத்தப்பட்டது. காரின் உறுதித் தன்மை, பாதுகாப்பு வசதிகள், காரின் செயல்பாடுகள் குறித்து தனித்தனியாக மதிப்பிட்டு மதிப்பெண் அளித்தனர். இறுதியில் 18 குழுக்களில் இருந்தும் தலா ஒரு மாணவர் தாங்கள் தயாரித்த காரை ஓட்டிக் காண்பித்தார். எங்களின் காரையும் சக மாணவர் ஓட்டிக் காண்பித்தார். பந்தயத்தின் இறுதியில் எங்களுக்கு 9-ம் இடம் கிடைத்தது. தேசிய அளவில் 9-வது இடத்தைப் பெற்றது பெருமைக்குரிய விஷயமே. சிறப்பான தருணமும் கூட. அதை கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறோம்” என்று பெருமைப்படுவதோடு, சிறப்பு காரை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற காராகவும் மாற்ற சக மாணவர்களுடன் முயற்சித்து வருகிறார்.
“பெட்ரோல்-டீசல் இரண்டு என்ஜின்களுமே அதிக அளவிலான புகையை வெளியிடுகின்றன. ஆனால் அதற்கு தீர்வாக இருக்கும் மின்சார கார்களில், குதிரைசக்தி குறைவாக இருப்பதால் மக்களுக்கு அதன் மீதான ஈர்ப்பு குறைவாக இருக்கிறது. அதைத் தவிர்க்க, மின்சாரத்தில் இயங்கும் அதிவேக சக்தி கொண்ட கார்களை உருவாக்க வேண்டும். அந்த வகை கார்களை ஏற்றுக்கொள்ள சிறிது காலமாகும். எனவே, முதலில் பெட்ரோல் மற்றும் மின்சாரம் ஆகியவை இணைந்த கார்களை தயாரித்து, வாகன ஓட்டிகளைப் பழக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் மின்சார கார்களை முழுவதுமாக ஏற்றுக்கொள்வார்கள். மேலும் எரிபொருளை சேமிக்கும் வகையிலான கார் களையும் தயாரிக்கவேண்டும். இத்தகைய என்ஜின்களை வருங்காலத்தில் நிச்சயம் தயாரிப்போம்” என்ற நம்பிக்கை வரிகளை தெறிக்கவிடுகிறார்கள், இந்த இளம் என்ஜினீயர்கள்.

Related Tags :
Next Story