ரூ. 714 கோடிக்கு விலைபோன ஓவியம்!
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஓவியர் வரைந்த ஓர் ஓவியத்தை 714 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கிறார், ஜப்பானைச் சேர்ந்த தொழில்முனைவாளர்.

மறைந்த ஓவியர் ஷான் மிஷெல் பாஸ்கியா வரைந்த அந்த ஓவியம், நியூயார்க்கில் பிரபல ஏல நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டது. அப்போது அந்த ஓவியம், 110.5 மில்லியன் டாலர் களுக்கு விற்பனையானது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 714 கோடி ரூபாய்.
ஓவியர் ஷான் மிஷெலின் முந்தைய மிகவும் விலையுயர்ந்த ஓவியத்தைக் காட்டிலும் இது கிட்டத்தட்ட இருமடங்கு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது.
தற்போது ஓவியத்தை ஏலத்தில் எடுத்துள்ள நபர்தான் ஓர் ஆண்டுக்குமுன், ஷான் மிஷெலின் அந்த ஓவியத்தையும் விலைக்கு வாங்கினார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள் வரைந்து விற்பனையான படைப்புகளிலேயே இது மிகவும் அதிக விலைக்குப் போன படைப்பு என்ற பெருமை தற்போதைய ஓவியத்துக்குக் கிடைத்திருக்கிறது. மேலும் பல சாதனைகளையும் இந்த ஓவியம் முறியடித்துள்ளது.
கருப்பின ஓவியர்களின் கலைப்படைப்புகளிலேயே மிக அதிக விலை போன படைப்பும் இதுதான்.
இந்த ஓவியம் மிகப்பெரிய தொகையை ஈட்டியுள்ளது மட்டுமின்றி 1980-ம் ஆண்டுக்குப் பிறகு 100 மில்லியன் டாலருக்கு அதிகமான தொகைக்கு ஏலம் போன முதல் ஓவியம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
பெயரிடப்படாத இந்த ஓவியம், ஆயில் ஸ்டிக், அக்ரிலிக் மற்றும் ஸ்பிரே வகை பெயிண்ட்களை கொண்டு வரையப்பட்டுள்ளது.
ஒரு மண்டையோடு வடிவத்தைக் கொண்ட முகத்தை இந்த ஓவியம் சித்தரிக்கிறது.
ஷான் மிஷெலின் இந்த ஓவியத்தை 41 வயதான ஜப்பானிய பேஷன் தொழில்முனைவாளர் யுசாகா மேசாவா ஏலத்தில் எடுத்தார்.
யுசாகா தான் பிறந்த நகரான சிபாவில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளார். அதன் ஓர் அங்கமாகத்தான் இதுபோன்ற மதிப்புமிக்க ஓவியங்களை அதிக விலை கொடுத்து வாங்கிவருகிறார்.
சோத்பைஸ் ஏல நிறுவனத்தில் இந்த ஓவியத்துக்கான ஏலம் சுமார் 10 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்றது.
கடைசியில் அது ஒரு பெருந்தொகைக்கு மேசாவாவுக்கு விற்கப்பட்டபோது அரங்கில் குழுமி யிருந்த அனைவரும் பெரும் ஆரவாரமும், கை தட்டல் ஒலியும் எழுப்பினர்.

Related Tags :
Next Story