ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்
ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்
கோவை,
மத்திய அரசு கொண்டு வர உள்ள ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் பி.மாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.முத்துராஜ், பொருளாளர் தங்க மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில இணை செயலாளர் ஹபிபுல்லா, துணை தலைவர் வடிவேல், நிர்வாகிகள் லாரன்ஸ் துரை, பாலதண்டபானி, கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு அறிவித்த ஜி.எஸ்.டி. வரி மூலம் ஓட்டல்கள், வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு நிறுவனங்களின் விற்பனை உள்நாட்டில் அதிகரிக்க ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இதனால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். உயிர் காக்கும் மருந்துகளை அரசே விற்பனை செய்ய வேண்டும்,, சுங்கவரியை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.