தேவகோட்டையில் பன்றிகளை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
தேவகோட்டையில் பன்றிகள் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை,
தேவகோட்டையில் பல ஆண்டுகளாக பன்றிகள் அட்டகாசம் செய்து வந்தன. இந்த பன்றிகளால் நகராட்சி பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு நிலவி வந்தது. மேலும் நகரில் திரியும் பன்றிகள் சாக்கடை கால்வாய்களில் அசுத்தம் செய்தும், ஓட்டல், திருமண மண்டபங்களிஹ்; கொட்டப்படும் கழிவுகளை கிளறியும் சீர்கேட்டை விளைவித்து வந்தன. இதனால் பன்றிகளை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து பன்றிகளை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்றாக சில ஆண்டுகளுக்கு நகரில் சுற்றித்திரிந்த பன்றிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. ஆனால் இதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. இதனையடுத்து பன்றிகளை பிடித்துக் கொண்டு போய் மேட்டுப்பகுதியில் விட்டனர். ஆனால் அவை மீண்டும் நகருக்குள் திரும்பி வந்துவிட்டன.
நடவடிக்கைஇதனைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் கூட்டம் நடத்தி, பன்றி வளர்த்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து பன்றி வளர்ப்பவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இருப்பினும் பன்றிகள் ஒழிந்தப்பாடில்லை.
இந்தநிலையில் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ., தேவகோட்டை நகரில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் பலர், தேவகோட்டை நகரில் திரியும் பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று = கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அவர், நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதியிடம் பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார்.
மாற்று ஏற்பாடுஇதனைத்தொடர்ந்து நகராட்சி கமிஷனர், பன்றி வளர்ப்பவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், பன்றி வளர்ப்போர் தங்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பது பன்றிகள் வளர்ப்பு தொழிலே. அவ்வாறு பன்றிகளை ஒழித்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே தங்களது வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடாக வேலை வழங்க வேண்டும் என்று கூறினர். இதற்கு பதிலளித்த நகராட்சி கமிஷனர், தேவகோட்டையில் உள்ள அனைத்து ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகளை லாரிகள் மூலம் அப்புறப்படுத்தும் வேலை வழங்குவதாக உறுதியளித்தார். இதனையடுத்து பன்றி வளர்ப்போருக்கு செய்யப்பட்ட மாற்று ஏற்பாட்டை தொடர்ந்து, அவர்கள் பன்றிகளை அடியோடு ஒழிக்க முடிவு செய்யப்பட்டது.