தியாகதுருகம், திருக்கோவிலூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா


தியாகதுருகம், திருக்கோவிலூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 4 Jun 2017 4:15 AM IST (Updated: 4 Jun 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் மற்றும் திருக்கோவிலூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கருணாநிதி பிறந்த நாள் விழா தியாகதுருகம் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்– அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா தியாகதுருகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மவு

தியாகதுருகம்,

தியாகதுருகம் மற்றும் திருக்கோவிலூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கருணாநிதி பிறந்த நாள் விழா

தியாகதுருகம் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்– அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா தியாகதுருகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மவுண்ட்பார்க்பள்ளி தாளாளரும், கட்சி பிரமுகருமான மாணிமாறன் தலைமை தாங்கினார். தியாகதுருகம் வடக்கு ஒன்றியசெயலாளர் திம்மலை நெடுஞ்செழியன், ஒன்றிய துணைசெயலாளர் அண்ணாதுரை, முன்னாள் ஒன்றியசெயலாளர் சதா.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பிரதிநிதி மலையரசன் வரவேற்றார். விழாவில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தியாகதுருகம் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புக்குளம், கடை வீதி, சந்தைமேடு பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அவைத்தலைவர்கள் சாமிதுரை, நூர்முகமது, ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் எத்திராசு, பெருமாள், நெடுஞ்செழியன், இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன், மாவட்டநெசவாளரணி துணை அமைப்பாளர் முரசொலிமாறன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அப்துல்கபூர், பொருளாளர் சுப்பு இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்கோவிலூர்

இதேபோல் திருக்கோவிலூர் ஒன்றிய, நகர, தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழா திருக்கோவிலூரில் கொண்டாடப்பட்டது. இதற்கு நகர செயலாளர் ஆர்.கோபி தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர்கள் கோவிந்த், கலைவாணி சக்திவேல், கோபு, நகர இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் வெங்கட் வரவேற்றார்.

இதில் ஒன்றிய செயலாளர் வக்கீல் எம்.தங்கம், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் தேவிமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் நகர தொண்டர் படை அமைப்பாளர் பூபதி, ராஜா, முன்னாள் கவுன்சிலர் அண்ணாதுரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஆதிநாராயணமூர்த்தி, வார்டு நிர்வாகிகள் கார்த்தி, ரமேஷ், சரவணன், ஜெய்சங்கர், வாசுதேவன், வெங்கடேசன், கீழையூர் ராமு, சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 9–வது வார்டு நிர்வாகி ப்ரஸ்துரை நன்றி கூறினார்.


Next Story