தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பரமேஸ்மங்கலத்தை சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது 30)
சென்னை,
இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பாலசந்திரன் குடும்பத்தினருடன் வீட்டின் கதவை திறந்து வைத்து கொண்டு தூங்கி கொணடிருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.18 ஆயிரம், வெள்ளி கொலுசு, வெள்ளி விளக்கு போன்றவை மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது.
இரவு வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த நகை, பணத்தை திருடி உள்ளனர். இது குறித்து பாலசந்திரன் திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவில் பூட்டு உடைப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள வெங்கிடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தெள்ளிமேட்டில் பவானி பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை கடந்த 2012-ம் ஆண்டு பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவிலுக்குள் சென்று பார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. மேலும் பித்தளை விளக்கு மற்றும் பூஜை பொருட்களும் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது. இது குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story