லாரிகளில் ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரிகளை திருடிய 2 வாலிபர்கள் கைது


லாரிகளில் ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரிகளை திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 4 Jun 2017 4:30 AM IST (Updated: 4 Jun 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில், லாரிகளில் ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரிகளை திருடிய 2 வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி பாலக்கரை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முதலியார் சத்திரத்தை சேர்ந்த ரவீந்திரன் என்பவருக்கு சொந்தமான 3 லாரிகளில் 6 பேட்டரிகளும், சிவாஜி என்பவரின் லாரியில் 2 பேட்டரிகளும், காந்தி மார்க்கெட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வாஸ் நகரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் 2 லாரிகளில் 4 பேட்டரிகளும் திருடு போயின.

இது தொடர்பாக பாலக்கரை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த தொடர் திருட்டு சம்பவங்களை தொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

2 பேர் கைது

இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் மகா மாரியம்மன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படியாக வந்த முதலியார் சத்திரத்தை சேர்ந்த அஜீத் குமார்(வயது 21), பாலக்கரை ஆலம்தெருவை சேர்ந்த பிரகாஷ்(19) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், பாலக்கரை மற்றும் காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீஸ் நிலைய வழக்கு களில் திருட்டுபோன ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள 12 பேட்டரிகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். அதன்பேரில் போலீசார் அஜீத்குமார், பிரகாஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த 12 பேட்டரிகளும் மீட்கப் பட்டன.


Related Tags :
Next Story