ரூ.7½ கோடியில் புதிய பாலங்கள் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
காவிரி, அரசலாற்றின் குறுக்கே ரூ.7½ கோடியில் புதிய பாலங்கள் கட்ட அமைச்சர் துரைக்கண்ணு அடிக்கல் நாட்டினார்.
கபிஸ்தலம்,
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடியில் இருந்து சுந்தரபெருமாள்கோவில் பகுதியை இணைக்கும் வகையில் காவிரி மற்றும் அரசலாற்றின் குறுக்கே பாலங்கள் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை நிறைவேற்றும் வகையில் காவிரி, அரசலாற்றின் குறுக்கே 2 புதிய பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி ரூ.7 கோடியே 60 லட்சம் செலவில் 2 புதிய பாலங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபிநாதன் வரவேற்றார். ரெங்கசாமி எம்.எல்.ஏ., மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், பா.ஜனதா கட்சியின் மாநில விவசாயப்பிரிவு தலைவர் அஜய்பிரபாகர், மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் சதன்குமார், அரசு வக்கீல் சோழபுரம் அறிவழகன், ஒப்பந்தக்காரர் கவுசிக்ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு புதிய பாலங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோரிக்கை
இந்த பகுதியில் உள்ள 21 கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பாபநாசம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆறுகளில் பொதுமக்களின் வசதிக்காக ஏராளமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் ஒரு கலை அறிவியல் கல்லூரி கட்ட வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக முதல்-அமைச்சர் கூறி உள்ளார். கல்லூரி கட்டுவதற்கு 100 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. நிலம் கிடைத்தவுடன் விரைவில் கல்லூரி கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் ஆனந்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் மகேந்திரன், பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பழனிச்சாமி, கண்ணன், முருகதாஸ், முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய ஆணையர் நாராயணன் நன்றி கூறி னார்.

Related Tags :
Next Story